×

இந்தியாவில் ‘ப்ளூ டிக்’கிற்கு ரூ.719 கட்டண அறிவிப்பு

வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கினார். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் ‘ப்ளூ டிக்’கிற்கு கட்டணம் அறிவித்தார். இதற்காக சம்பந்தப்பட்ட பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்தது. கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ப்ளூ டிக் சேவையை பெற மாதம் ரூ. 719 செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் ப்ளூ டிக் சேவையை தற்போது பணம் கொடுத்து பெறும் வசதி உள்ளதால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்று பலர் கண்டித்துள்ளனர். எனினும், யாராவது ட்விட்டரில் இதனை தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் பணத்தை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Tags : Blue Dick ,India , Rs. 719 tariff announcement for 'Blue Dick' in India
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...